கோவையில் இருந்து விமான சுற்றுலா
கோவை; கோவையில் இருந்து சார் தாம் விமானச் சுற்றுலாவை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சுற்றுலா செப்., 26ம் தேதி துவங்குகிறது. சுற்றுலா, 12 இரவுகள், 13 பகல்கள் அடங்கியது. இமயமலைத் தொடரில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனுத்திரி, உத்தர் காசி, ஜோஷி மத், மானா கிராமம், ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக புனித தலங்களை காணலாம். விமான கட்டணம், ஓட்டலில் தங்கும் வசதி, வாகனம் மூலம் சுற்றிப்பார்க்கும் வசதி, உணவு ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 61 ஆயிரத்து, 750 ரூபாய். விவரங்களுக்கு, 90031 40655; www.irctctourism.com.