உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா

 மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா

அக்சரா அகாடமி பள்ளியில் குழந்தை களுக்கு இயற்கை சூழலோடு இணைந்த மகிழ்வான கற்றல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவ்வாண்டு பள்ளியானது சி.பி.எஸ்.இ.,யின் ஒப்புதலைப்பெற்று 12ம் வகுப்பிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் சிந்தனைத் திறன் மேலோங்க ஸ்மார்ட் போர்டு பயன்பட்டு வரு கிறது. இன்றைய சூழலில் மாணவர்களின் மனநலனையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு நாள்தோறும் விளையாட்டுத் துறை ஆசிரியர்களால் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.கற்றலோடு மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியும் ஆசிரியர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில், ஒரு வகுப்பிற்கு வெறும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்ற னர். இதன்வாயிலாக, ஒவ்வொரு மாணவருக்கும் தனி கவனம் அளிக்கப்பட்டு, கல்வி மற்றும் தனித்திறனில் சிறந்த முறையில் வழிநடத்தப்படுகின்றனர். தற்போது பிளஸ் 1 வகுப்புகளுக்கான அட்மிசன் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை