உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட மதுபானம், புகையிலை பறிமுதல்

ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட மதுபானம், புகையிலை பறிமுதல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி பிரிவில், கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில், எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த 'ஸ்பீட் ஆம்புலன்ஸ்' வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், மதுபான பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்சில் வந்தவர்களிடம், போலீசார் விசாரித்தனர்.அதில், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ேஷக் மீரான்,38, 'ஸ்பீட் ஆம்புலன்ஸ்' ஓட்டி வருகிறார். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், முடீஸ் போலீஸ் ஸ்டேஷனில், தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை, வடமாநிலமான அசாம் கொண்டு சென்றார்.ஆம்புலன்சில் திரும்பி வந்த போது, அங்கு இருந்து, 17 மதுபான பாட்டில்கள், 5.7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவருடன், கோட்டூர் ரோட்டை சேர்ந்த முகமது பாசித்,25, சூளேஸ்வரன்பட்டி பழனியப்பன்,31, ஆகியோர் உடன் இருந்தது தெரிய வந்தது.ஆம்புலன்ஸ், மதுபான பாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ