உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் மாணவர்கள் பொன் விழா நடத்த முடிவு

முன்னாள் மாணவர்கள் பொன் விழா நடத்த முடிவு

அன்னுார்: அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பொன்விழா கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி 1951ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1974- 75ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், கோவில்பாளையம், அன்னூரிலிருந்து முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் தாங்கள் இப்பள்ளியில் படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் பொன் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதில் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கவுரவிப்பது, பள்ளிக்கு உதவுவது, முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை