மேலும் செய்திகள்
திருக்குறள் கும்மி அரங்கேற்றம்
15-Oct-2024
அன்னுார், : அன்னுாரில் நடந்த அரங்கேற்றத்தில், 300 பேர், மூன்றரை மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் ஆடி, அசத்தினர்.அன்னுார் வட்டாரத்தில், பல்வேறு கலைக்குழு சார்பில், சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு வள்ளி கும்மியாட்டம் கற்பிக்கப்படுகிறது. அன்னுார் ஏ.எம். காலனியில், வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், கடந்த 45 நாட்களாக, 300க்கும் மேற்பட்டோருக்கு, வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆட்டம் கற்பிக்கப்பட்டது.அரங்கேற்ற விழா, அன்னுார் கொங்கு செட்டியார் மகாலில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. முளைப்பாரி எடுக்கப்பட்டது. விநாயகர் வழிபாடு நடந்தது. நாட்டுப்புறப் பாடல் மற்றும் திருக்குறள் பாடலுக்கு, இசைக்கு ஏற்ப, கைகளை மேலும் கீழும் உயர்த்தி, நளினமாக சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், 300 பேர், மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர். பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து, பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் மு.பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். பழனிச்சாமி மற்றும் இணை ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள், எய்ம் பவுண்டேசன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
15-Oct-2024