உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுக்கரை குறுமைய விளையாட்டு; வாலிபால் போட்டியில் அசத்தல்

மதுக்கரை குறுமைய விளையாட்டு; வாலிபால் போட்டியில் அசத்தல்

கோவை; ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், மதுக்கரை குறுமைய விளையாட்டு போட்டிகள், கற்பகம் பல்கலையில் கடந்த, 7 முதல் நடந்து வருகிறது. த்ரோபால், வளையப்பந்து, பூப்பந்து, கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளில், 42 பள்ளிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விளையாடி வருகின்றனர். போட்டிகளில் 14 மற்றும், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான பீச் வாலிபால் போட்டியில், குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான போட்டியில், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி இரண்டாம் இடத்தையும், மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், குளோபல் பாத்வேஸ் பள்ளி முதலிடத்தையும், பி.எம்.ஜி., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ