உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி, கல்லுாரிகள் வாலிபால் போட்டியில் அசத்திய அணிகள்

பள்ளி, கல்லுாரிகள் வாலிபால் போட்டியில் அசத்திய அணிகள்

கோவை; பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், கோவை அகர்வால் பள்ளியும், கல்லுாரி மாணவியரில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணியும் முதல் பரிசுகளை தட்டின.கோவை விழாவையொட்டி, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவியருக்குமான வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன. தலா, 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற போட்டிகளை கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த பள்ளி மாணவர்களுக்கான முதல் அரையிறுதியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி, 25-16, 25-12 என்ற புள்ளி கணக்கில் சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளியையும், இரண்டாம் அரையிறுதியில், அகர்வால் மெட்ரிக் பள்ளி, 25-13, 25-10 என்ற புள்ளி கணக்கில் கிரசன்ட் பள்ளி அணியையும் வென்றன. இறுதிப்போட்டியில், அகர்வால் பள்ளி, 25-23, 25-23 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. கல்லுாரி மாணவியருக்கான போட்டியின் முதல் அரையிறுதியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியும், ஜே.சி.டி., கல்லுாரியும் மோதின.பரபரப்பான ஆட்டத்தில், 25-10, 25-18 என்ற புள்ளி கணக்கில் ராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 25-9, 25-7 என்ற புள்ளி கணக்கில் எஸ்.என்.எஸ்., பார்மா மெடிக்கல் கல்லுாரி அணியை வென்றது.இறுதிப்போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 25-10, 25-9 என்ற புள்ளிக் கணக்கில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை