மேலும் செய்திகள்
மருதமலையில் அமைச்சர் சுவாமி தரிசனம்
16-Oct-2026
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 11ம் தேதி, நவராத்திரி உற்சவம் கோலாகலமாக துவங்கியது. கொலு படிகள் வைக்கப்பட்டு முப்பெரும் தேவியருக்கும் உற்சவமூர்த்திகளுக்கும்நாள்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. விஜயதசமியன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோயிலை சுற்றி வந்து, வன்னி மரமாக இருந்த மகிஷாசுரனை அம்பு எய்து அழித்த அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது. கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
16-Oct-2026