உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்புலன்ஸ் மக்கர் ; பழங்குடியினர் தவிப்பு

ஆம்புலன்ஸ் மக்கர் ; பழங்குடியினர் தவிப்பு

வால்பாறை ; மாநில எல்லையில் ஆம்புலன்ஸ் பழுதானதால், பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழக - கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், மளுக்கப்பாறை மலைப்பகுதியில் ஐந்து இடங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. இவர்கள் வனப்பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தோட்ட பயிர்களை பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக கேரளாவில் உள்ள சாலக்குடிக்கும், தமிழக எல்லையில் உள்ள வால்பாறைக்கும் அதிக அளவில் வருகின்றனர்.இந்நிலையில், செட்டில்மென்ட் பகுதி பழங்குடியின மக்கள் வசதிக்காக பழங்குடியினர் துறை சார்பில் ஒரு ஆம்புலன்சும், போலீஸ் சார்பில் ஒரு ஆம்புலன்சும் உள்ளன. மளுக்கப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஆம்புலன்ஸ் சில தினங்களுக்கு முன் சபரிமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றது. மற்றொரு ஆம்புலன்ஸ் கட்டப்புரம் பகுதியில் பழுதான நிலையில் உள்ளது.இதனால், அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாமல், தனியார் வாகனங்கள் வாயிலாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். பழங்குடியின மக்களின் நலன் கருதி, கேரள மாநில அரசு பழுதடைந்த நிலையில் உள்ள ஆம்புலன்சை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி