வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிறப்பு
நேரடி விமான சேவையை தொடங்கவேண்டும்
கோவை : கோவையில் இருந்து மும்பை வழியாக ஒற்றை நிறுத்த அடிப்படையில், அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள ஆறு நகரங்களுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை அறிவித்துள்ளது.புதிய சேவையின் வாயிலாக, கோவையிலிருந்து மும்பை வழியாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு, இரு மார்க்கத்திலும் குறுகிய பரிமாற்ற நேரத்துடன், ஒரு நிறுத்த விமான இணைப்பு வழங்கப்படுகிறது. பயணிகள், வணிக வகுப்பு, 'பிரீமியம் எகானமி'(சில பிரிவுகள்) மற்றும் 'எகானமி' வகுப்பு வசதிகளைப் பயன்படுத்தலாம்.பிராங்பேர்ட், பாரீஸ்க்கு பிரீமியம் வசதியுடன் கூடிய புதிய 'பி' 787 - 9 வரிசை விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு, 'பி' 777 விமானங்கள் இயக்கப்படும். மும்பையிலிருந்து நியூயார்க், நெவார்க், லண்டன், பாரீஸ், பிராங்பேர்ட் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு, விமானங்கள் இயக்கப்படும். இச்சேவைகள் வரும், நவ., 12 முதல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு
நேரடி விமான சேவையை தொடங்கவேண்டும்