உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன் அகாடமி நிறுவனம் கோவையில் துவக்கம்

அன் அகாடமி நிறுவனம் கோவையில் துவக்கம்

கோவை; மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும், 'அன் அகாடமி' பயிற்சி நிறுவனம், கோவையில் துவங்கப்பட்டது.நாடு முழுவதும் உள்ள, 'அன் அகாடமி' கற்றல் தளம், நீட், ஜே.இ.இ., மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இதன், 75வது கிளை, கோவை ராம்நகர் விவேகானந்தா சாலையில் உள்ள மையத்தில் துவக்கப்பட்டது.மத்திய இணையமைச்சர் முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ''வரும் 2047க்குள், வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி, இந்தியா முன்னேறி வருகிறது. நாட்டில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,களின் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது.2014ம் ஆண்டுக்கு முன், ஏழாக இருந்த 'எய்ம்ஸ்' எண்ணிக்கை, இன்று 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜி' விரைவில் வரவிருக்கிறது,'' என்றார். பயிற்சி நிறுவன இயக்குனர் நவீன் பிரபு, கோவை செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாகி நந்தகுமார், தன்னம்பிக்கை பேச்சாளர் பிரியா செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை