உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனையூர் அரசு பள்ளி அசத்தல்

ஆனையூர் அரசு பள்ளி அசத்தல்

அன்னுார் : சர்க்கார் சாமக்குளம், குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஆனையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஹரிஷ், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வட்டெறிதலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பூப்பந்துப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இப்பள்ளி அணி இரண்டாம் இடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் கேரம் போட்டியில் ஹரிணி, மேகவர்த்தினி இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கேரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் பிளஸ் 1 மாணவி ஜனனிகா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 19 வயதுக்குட்பட்ட பிரிவில், மாணவர் சஞ்சீவ் குமார் ஈட்டி எறிதலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். சாதித்த, மாணவ, மாணவியருக்கு, தலைமை ஆசிரியை சரவணா தேவி, உடற்கல்வி ஆசிரியர் முருகசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ