மேலும் செய்திகள்
மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது
01-Nov-2025
நவ. 9ல் மாரத்தான்
01-Nov-2025
கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மக்களிடம் உடற்தகுதியை மேம்படுத்தும் வண்ணம், நெடுந்துார ஓட்டப்போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் வரும், 15ம் தேதி இப்போட்டி நடக்கிறது. நேரு ஸ்டேடியம் முன் துவங்கும் ஓட்டம், எல்.ஐ.சி., அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தை அடைகிறது. இதில், 17 முதல், 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., ஓட்டமும், பெண்களுக்கு, 5 கி.மீ., ஓட்டமும் இடம்பெறுகிறது. அதேபோல், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., ஓட்டமும், பெண்களுக்கு, 5 கி.மீ., ஓட்டமும் நடக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் சான்றிதழ்களை, போட்டி நடக்கும் நாளில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000,மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. தவிர, நான்கு முதல், 10 இடங்களில் வருபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
01-Nov-2025
01-Nov-2025