மேலும் செய்திகள்
அன்னாபிஷேகம் அன்று 3 மணி நேரம் நடை அடைப்பு
10-Nov-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கரப்பாடி கிராமம் அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி, அன்னாபிேஷகம் நடக்கிறது.உலகில் வாழும் உயிரினங்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று, சிவாலங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி, சிவனுக்கு பழங்கள், காய்கறிகள் சேர்த்து, அன்னத்தால் அலங்கரித்து, தீபாராதனை செய்யப்படுகிறது.சில மணி நேரங்களில் அதனை கலைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பிரசாதம் சாப்பிட்டால் மகப்பேறு இல்லாதவர்கள் பிரார்த்தனை நிறைவேறும். உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.பொள்ளாச்சி அருகே உள்ள, கரப்பாடி கிராமம் அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி, ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, மதியம், 2:00 மணிக்கு கணபதி ேஹாமம், மாலை, 4:00 மணிக்கு அன்னாபிேஷகம், மாலை, 5:00 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
10-Nov-2024