உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவபெருமானுக்கு அன்னாபிேஷக வழிபாடு

சிவபெருமானுக்கு அன்னாபிேஷக வழிபாடு

-- நிருபர் குழு -உலக உயிரினருக்கு உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று அன்னாபிேஷக விழா நடக்கிறது. * பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அன்ன அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அன்ன அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.*கிட்டசூராம்பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு, 16 வகையான திரவியங்களால அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு

* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று விளக்கேற்றியும், பக்தி பாடல்கள் பாடியும் வழிபாட்டனர்.* கரப்பாடி சிவன் கோவிலில், சுவாமிக்கு அன்னம், பழம் மற்றும் காய்கறிகள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.* நெகமம் மாயாண்டீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.

வால்பாறை

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாலை பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர்,தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷக பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, அன்னம், காய்கறி, பழங்களை கொண்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.* வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில் வளாத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவிலிலும் மகாஅன்னாபிேஷக விழா நடந்தது.

உடுமலை

*உடுமலை பகுதியிலுள்ள சிவாலயங்களில், அன்னாபிேஷக விழா நேற்று நடந்தது. சிவபெருமானுக்கு, அன்னம், காய்கறிகள், பழம் உள்ளிட்ட உணவு பொருட்களால், அன்னாபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.*மடத்துக்குளம், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு, 150 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளால், அன்னாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.* உடுமலை, ருத்ரப்ப நகர் விசாலாட்சியம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரருக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகமும், அன்னாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து, சாந்தாபிேஷகம், கலசாஅபிேஷகம், அலங்காரம், மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* உடுமலை ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், தில்லை நகர் ரதத்தினலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், அன்னாபிேஷகம் நடந்தது.*சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிேஷக விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த அமரபுயங்கீஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை