அப்பிச்சிமார் கோவிலில் இன்று அன்னதானம்
அன்னுார்: செம்மாணி செட்டிபாளையம் அப்பிச்சிமார் கோவிலில் அன்னதான விழா இன்று நடக்கிறது. கணேசபுரம் அருகே செம்மாணி செட்டிபாளையத்தில் பழமையான அப்பிச்சிமார் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று அன்னதான விழா நடக்கிறது.இன்று காலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. இதில் ஊர் பெரியவர்கள் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதேபோல் குன்னத்துார் புதுார் பெருமாள் கோவில், ஓரைக்கால் பாளையம் ராமர் கோவில், வரதையம்பாளையம் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.