உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

பொள்ளாச்சி; திருக்கோவில்களில் இலவச திருமணம் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவில்களில் வழங்கப்படுகிறது, என, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள கோவில்களில், சட்டசபை அறிவிப்பின்படி அடுத்த மாதம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கோவில் வாயிலாக, 4 கிராம் தங்கம் உள்பட, 70 ஆயிரம் ரூபாய் திட்ட செலவில் திருமணம் நடத்தப்படுகிறது.அடுத்த மாதம், 7ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கோவில் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.மணமக்களுக்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும். மணமகனுக்கு வயது, 21; மணமகளுக்கு, 18 ஆகவும், ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பங்கள், இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வர்கள் அலுவலகங்கள், அனைத்து கோவில்களிலும் கிடைக்கும். இத்தகவலை, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ