மேலும் செய்திகள்
சுங்க வசூல் ஏலம் ரத்தால் அதிருப்தி
15-Mar-2025
சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்அன்னுார்: அன்னுார் ஓதிமலை சாலையில், வார சந்தை செயல்படுகிறது. சனிதோறும் 500க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று பொருட்களை விற்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காய்கறி, மளிகை, ஆடு, கோழி உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்கின்றனர். ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் பேரூராட்சிக்கு ஏலத்தொகை செலுத்தப்படுகிறது.சந்தையில் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் நேற்று பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தற்போதைய ஏலதாரர் சுகுமார் பேசுகையில், ''27 ஆண்டுகளுக்கு முன்பு வார சந்தையில் வசூலிக்க வேண்டிய சுங்க கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளது. தற்போதைய விலைவாசிக்கேற்ப கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.புதிதாக ஏலம் எடுப்போர் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும். புதிய கட்டணம் நிர்ணயிக்கும் வரை ஏலம் விடக்கூடாது,'' என்றார்.செயல் அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில், ''புதிய கட்டணம் நிர்ணயிக்க, பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் நிர்வாக காரணங்களால் வார சந்தை ஏலம் ஒத்திவைக்கப்படுகிறது என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஏலதாரர்கள் கலைந்து சென்றனர்.
15-Mar-2025