மேலும் செய்திகள்
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு
22-Feb-2026
தொண்டாமுத்தூர்: கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ், 48. இவர், தனது நண்பர் மாரியப்பன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, மலையேற துவங்கியுள்ளனர். முதல் மலையில், குரங்கு பாலம் அருகே செல்லும்போது, ஹரிதாஸ்க்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர், அவரை டோலி மூலம் அடிவாரத்திற்கு துாக்கி வந்து அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர், ஹரிதாஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு, வெள்ளியங்கிரி மலை ஏறும்போது இதுவரை மூவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
22-Feb-2026