மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
06-Oct-2025
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அரசு பஸ் ஸ்டாண்டில் கடந்த மே மாதம் 6ம் தேதி போலீசார் நடத்திய சோதனையில், 24.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 620 கிராம் மெத்தாம்பெட்டமின் என்ற போதை மாத்திரையுடன், பட்டாம்பி ஓங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ், 34, என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், ஓமன் நாட்டில் இருந்து போதை மாத்திரை கடத்தி வந்துள்ளதும், இதற்கு இலியாஸ்க்கு பணம் கொடுத்து உதவியது, திருத்தால ஆனக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது முர்துல்லா, 35, என்பதும் தெரிந்தது. இதையடுத்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுனில் தலைமையில் சிறப்புப்படை அமைத்து, முகமது முர்துல்லாவை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். நேற்று, கண்ணூர் விமான நிலையம் வந்த முகமது முர்துல்லா, கண்ணூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்தனர்.
06-Oct-2025