உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் பெற்றுத்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி; மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகி கைது

கடன் பெற்றுத்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி; மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகி கைது

கோவை; வேலூரை சேர்ந்தவர் ரூபன், 50. கோவை கொண்டையம்பாளையத்தில் தனியார் அறக்கட்டளை நடத்தி வந்தார். அதில் செயலாளராக சண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், யசோதா, டேவிட்ராஜா ஆகியோர் இருந்தனர். அறக்கட்டளை வாயிலாக வட்டி இல்லாமலும், மானியத்துடனும் கடன் வாங்கி தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பலர் அறக்கட்டளையில் கடன் பெற பணம் செலுத்தினர். ஆனால், ரூபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பணம் செலுத்தியவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், ரூபன் உட்பட, 5 பேரும் ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து சண்முகத்தை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ரூபனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !