உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறவழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் இன்று ஆலோசனை

புறவழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் இன்று ஆலோசனை

கோவில்பாளையம் ': திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே துவங்கி, செமிபாளையம், சென்னியாண்டவர் கோவில், கிட்டாம் பாளையம், கணேசபுரம் வழியாக, மத்தம்பாளையத்தில் இணையும் வகையில், புதிய கிழக்கு புறவழிச்சாலை அமைக்க அளவீடு செய்யப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள் இணைந்து கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் துவக்கியுள்ளனர். இதன் ஆலோசனை கூட்டம், கோவில்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சியில், காளிபாளையத்தில் இன்று (7ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் பங்கேற்கின்றன. பாதிக்கப்படுவோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி