போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கோவை; மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீலிகோணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ் பங்கேற்று, சட்டப்பணிகள் குழு சார்பில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., செல்வதங்கம் பங்கேற்று, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், அவற்றை ஒழிப்பது குறித்தும் பேசினார்.