எட்டாம் வகுப்பு தகுதி வேலைக்கு பி.எச்டி. படித்தவர்கள் விண்ணப்பம்
சூலுார்: சூலுார் யூனியன் அலு வலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 74 பேர் விண்ணப்பித்துள்ளனர். சூலுார் யூனியன் அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக இருந்த பெண், ஓய்வு பெற்றதை அடுத்து அந்த இடம் காலியாக இருந்தது. அப்பணியிடத்தை நிரப்ப, பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த ஒரு பணியிடத்துக்கு, 74 பேர் விண்ணப்பித்து இருந் தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அது திடீரென ரத்து செய்யப்பட்டது. பண்டிகை கால விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசமூர்த்தி, முத்துராஜூ தலைமையிலான தேர்வு குழுவினர், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அனைவருக்கும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. பி.எச்டி, எம்.பி.ஏ., அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விண்ணப்ப தாரர்களில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் பலர் இருந்தனர். மேலும், பி.எச்டி., படித்த 2 பெண்களும், எம்.பி.ஏ. படித்த 2 பெண்களும் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விண்ணப்பித்த பெண்கள் கூறுகையில், அரசு பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் பல பணியிடங்களுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறோம். நேர்காணல், எழுத்து தேர்வு குறித்த அச்சம் குறைந்துள்ளது. வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான்,' என்றனர்.