முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க வாங்க
கோவை : அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள, முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 21 முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.மொத்தம், 557 இடங்கள் உள்ளன. கல்லுாரியில் மாணவர்களுக்கான சேர்க்கை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். விண்ணப்பக்கட்டணமாக, ரூ.60 வசூலிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் வசூலிக்கப்படும்.மாணவர்களின் தரவரிசைப்பட்டியல், ஜூலை, 18ம் தேதி வெளியிடப்படும்.சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், ஜூலை 25, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, ஜூலை, 28ல் நடக்க உள்ளது. முதுகலை மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், ஆக., 4 முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.