உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில தொழிற்சங்க செயலாளர் நியமனம்

மாநில தொழிற்சங்க செயலாளர் நியமனம்

வால்பாறை : தொ.மு.ச., பேரவையின் மாநில செயலாளராக வால்பாறையை சேர்ந்த வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார்.தி.மு.க., சார்பில் தொ.மு.ச., புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். தொ.மு.ச., பேரவை மாநில தலைவராக நடராஜ், பொது செயலாளராக சண்முகம், பொருளாளராக வள்ளுவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில செயலாளர்களாக, 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், வால்பாறையை சேர்ந்த வக்கீல் வினோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட அவருக்கு, தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை