மின் பணியாளர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
வால்பாறை; அமைப்பு சாரா மின் பணியாளர்கள் சங்கத்தின் வால்பாறை ஒன்றிய புதிய நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளனர். அமைப்பு சாரா மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (இணைப்பு தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம்) மாநில தலைவர் மாயாண்டி உத்தரவின் பேரில், வால்பாறை ஒன்றிய கிளை நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளனர். தலைவராக சவுந்திரராஜன், செயலாளராக மோகன், பொருளாளராக தமிழ்வாணன், துணைத்தலைவராக பிரதீப்குமார், துணை செயலாளராக அற்புதநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.