உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தகுதியில்லாத பில் கலெக்டர்கள் நியமனம் மத்திய மண்டல கூட்டத்தில் குற்றச்சாட்டு

தகுதியில்லாத பில் கலெக்டர்கள் நியமனம் மத்திய மண்டல கூட்டத்தில் குற்றச்சாட்டு

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் நடந்தது; மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில் குமரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:வரி விதிப்புக்குழு தலைவர் முபஷீரா: கோட்டைமேடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. சாலையை தோண்டும்போது, சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து விடுகிறது; அதை விரைந்து சரி செய்ய வேண்டும். ரோடு சீரமைக்கும் பணி பாதிக்கிறது.சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன்: பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. புதிதாக பொருத்தப்படும் தெருவிளக்குகளும் இரு நாட்களில் ரிப்பேராகி விடுகின்றன. கவுன்சிலர் வித்யா: காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது; கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.கவுன்சிலர்கள் தினமும் வார்டுக்குள் செல்ல வேண்டும். டெண்டர் கோரப்பட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சில வார்டுகளுக்கு தகுதியில்லாத பில் கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரி விதிப்பை பற்றி எதுவும் தெரிவதில்லை; மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கிறது.- -மீனாமண்டல தலைவர்சரியாக வேலை செய்யாதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறவர்களை, இடமாற்றம் செய்வது இயல்பு. அவ்வாறு மாற்றும்போது, சில நாட்கள் தொய்வு ஏற்படுவது வழக்கம். படிப்படியாக பணிகள் சீரடையும். குடிநீர் குழாய் உடைந்தால், சீரமைக்க வேண்டியது சூயஸ் நிறுவனத்தின் கடமை. அதை செய்யத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.- செந்தில்குமரன்உதவி கமிஷனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி