மூத்த பெண் பட்டய கணக்காளர்களுக்கு பாராட்டு விழா
பெ.நா.பாளையம், ; துடியலூரில் மூத்த பெண் பட்டய கணக்காளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின், கோவை கிளையில் மூத்த பெண் பட்டய கணக்காளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பட்டய கணக்காளர்களாக பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண் பட்டய கணக்காளர்களுக்கும், சொந்தமாக தணிக்கை நிறுவனங்களை நடத்தி வரும் பெண் பட்டய கணக்காளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அனைவரையும் ஐ.சி.ஏ.ஐ., யின் கோவை கிளை தலைவர் சதீஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில், கோவை மேயர் ரங்கநாயகி பேசுகையில், தணிக்கை துறையில் பெண் பட்டய கணக்காளர்கள் பங்களிப்பு மகத்தானது. மாறிவரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, பெண் பட்டய கணக்காளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட பாடுபட வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், ஐ.சி.ஏ.ஐ.,ன் அகில இந்திய முன்னாள் தலைவர் ராமசாமி பேசுகையில், ஐ.சி.ஏ.ஐ., பெண் பட்டய கணக்காளர்களுக்கு அளித்து வரும் முன்னுரிமைகள் குறித்தும், சிறப்பு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.விழாவில், ஐ.சி.ஏ.ஐ., யின் தென் மண்டல உறுப்பினர் ராஜேஷ், கோவை கிளை செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.