உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா உள்பட, தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. காரமடை வட்டாரம் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, காரமடை கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் அமைக்க உதவியவர்களுக்கு பாராட்டு, புதிய உறுப்பினர்கள் வரவேற்றல் என முப்பெரும் விழா, மேட்டுப்பாளையம் தனியார் மண்டபத்தில் நடந்தது.விழாவுக்கு வட்டாரத் தலைவர் மணி மலர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். செயலாளர் கனகராஜ் அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் மயில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டியும், வாழ்த்தியும், பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பேசினார். மேற்கு மண்டல மாநில செயலாளர் சுனில் குமார், மாநில துணைத்தலைவர் தங்கபாசு, மாவட்டத் தலைவர் ரங்கநாத மூர்த்தி, உட்பட பலர் பேசினர். விழா ஏற்பாடுகளை நாராயணசாமி ஒளியழகன், துர்கா தேவி, பூர்ணிமா உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட துணைத் தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ