உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வில்வித்தை பயிற்சியாளர் கைது

 சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வில்வித்தை பயிற்சியாளர் கைது

கோவை: கோவை மாவட்டம், வடவள்ளி, மஹாராணி அவென்யூவை சேர்ந்தவர் கிஷோர்குமார், 35; வில்வித்தை பயிற்சியாளர். உலியம்பாளையத்தில் வில்வித்தை பயிற்சி மையம் நடத்தி வந்தார். இவரிடம், 2022ல் கோவையை சேர்ந்த, 13 வயது சிறுமி ஒருவர் பயிற்சிக்காக சேர்ந்தார். அப்போது, சிறுமிக்கு, கிஷோர்குமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதுகுறித்து, பெற்றோரிடம் அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நவ., 8ல் சென்னையில் நடந்த வில்வித்தை போட்டியில் பங்கேற்ற சிறுமி, அங்கு வந்த கிஷோர்குமாரை பார்த்து பயந்து, மயங்கி விழுந்தார். பின், சிறுமி, மூன்று ஆண்டுகளுக்கு முன், கிஷோர்குமார் செய்த பாலியல் துன்புறுத்தல் குறித்து, பெற்றோரிடம் கூறினார். கோவை மேற்கு போலீசார், கிஷோர்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை