மேலும் செய்திகள்
பரவுகிறது வைரஸ் காய்ச்சல்: கைகழுவுவது, மாஸ்க் நல்லது
3 hour(s) ago
411 விநாயகர் சிலைகள் குளங்களில் விசர்ஜனம்
3 hour(s) ago
பெண் மரணம் நகை மாயம்
4 hour(s) ago
மஹா பெரியவாளுக்கு அபிஷேகம்
4 hour(s) ago
சூலூர்: சூலூரில் கட்டட பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. சூலூர் கட்டட பொறியாளர் சங்கத்தின் சார்பில், பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய பொறியியலின் தந்தையான விஸ்வேஸ்வரையா பிறந்த நாள், தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூலூர் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்த விழாவில், சிறந்த பொறியாளர் விருது, பசுமை நிழல் விஜயகுமாருக்கு வழங்கி கவுரவிக்கப் பட்டது. தேசத்தின் உள் கட்டமைப்பை வடிவமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள் கட்டுதல் என,அனைத்து துறை பணிகளிலும் பொறியாளர்களின் உழைப்பு அளவிட முடியாதது. வளமான, வலிமையான முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கும் பொறியாளர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என, விழாவில் நிர்வாகிகள் பேசினர். பொறியாளர்கள் ராமசாமி, நாட்ராயன், காளிமுத்து, சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago