உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோர திறந்தவெளி கிணறுகள் இருக்கிறதா; ஆய்வு செய்ய உத்தரவு

சாலையோர திறந்தவெளி கிணறுகள் இருக்கிறதா; ஆய்வு செய்ய உத்தரவு

கோவை, ; கோவை மாவட்டத்தில் சாலையோரம், திறந்தவெளி கிணறுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.சமீபத்தில் கோவை மாவட்டம், துடியலுாரிலிருந்து சென்ற ஒரு ஆம்னிவேன், துாத்துக்குடி சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில், 50 அடி ஆழ தண்ணீர் உள்ள திறந்தவெளி கிணற்றில் விழுந்து மூழ்கியது. ஐந்து பேர் பலியாயினர்.கோவை மாவட்ட விவசாய விளை நிலங்களில், ஏராளமான திறந்தவெளி கிணறுகள் அமைந்துள்ளன. சில விவசாய விளை நிலங்கள், சாலையோரத்தில் அமைந்திருக்கின்றன. சாலையோரம் விபத்து ஏற்பட்டால், கிணற்றில் விழுந்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். அதனால் சுற்றுச்சுவர், கிரில் அமைத்து பாதுகாக்க, கோவை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'சாலையோரம் திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அது பயன்பாட்டிலுள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்து, சுற்றுச்சுவர் மற்றும் இரும்புகம்பியால் ஆன கிரில் அமைத்து நீராதாரமாக பயன்படுத்தலாம். பயன்பாடற்ற கிணறாக இருந்தால், மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி