உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்கள்... வாழைப்பழம் சாப்பிடுபவரா? எத்தலின் ஸ்பிரே தெளித்திருந்தால் உடல் பாதிக்கும்

நீங்கள்... வாழைப்பழம் சாப்பிடுபவரா? எத்தலின் ஸ்பிரே தெளித்திருந்தால் உடல் பாதிக்கும்

கோவை : வாழைப்பழத்தில் 'எத்தலின் ஸ்பிரே' தெளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாழை முழுவதுமாக பழுத்தபின் அறுவடை செய்தால், விற்பனை செய்வதற்குள் பல பழங்கள் வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், 75 சதவீதம் காயாக உள்ள நிலையில் விவசாயிகள் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்புகின்றனர். வியாபாரிகள் விரைந்து விற்பனை செய்ய, 'எத்தலின் ஸ்பிரே' பயன்படுத்தி, பழுக்க வைக்கின்றனர். பொதுவாக, பிரஷ் ஆக வாங்கும் வாழைப்பழங்களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிட முடியும். தற்போது முதல் நாள் பிரஷ் ஆக இருக்கிறது; மறுநாளே கருகத்துவங்கி விடுகிறது. தோல்கள் கருத்த பின்னரும், காய் தன்மை அதிகம் இருப்பதை காண முடிகிறது. கோவையில் சில இடங்களில் இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் விற்கப்படுகின்றன.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''வாழைப்பழம் 'எத்தலின் ரைப்பனர்' விதிமுறைப்படி பயன்படுத்த அனுமதி உண்டு. நேரடியாக பழங்கள் மீது படும்படியோ, ஸ்பிரே செய்யவோ அனுமதியில்லை. சிலர் சீக்கி ரமாக பழுக்க வைக்க இதனை ஸ்பிரே செய்கின்றனர். இதன் காரணமாக, வாழைப்பழங்களின் தோல்கள் சீக்கிரமாக மாறிவிடும். ''இயற்கையாக இருப்பின், வாழைப்பழத்தோல் ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். செயற்கை ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓரிடத்தில் மஞ்சளாகவும், சில இடங்களில் பச்சையாகவும் இருக்கும். தவிர, புள்ளி புள்ளியாக தோலில் கருப்புநிறம் தோன்றினாலே மக்கள் தெரிந்துகொள்ளலாம். அத்தகைய பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். பழ மார்க்கெட்டுகளில் செயற்கையாக பழுக்க வைப்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை