உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மிதக்கும் யோகாசன போட்டி : ஏ.ஆர்.பி., மாணவர்கள் வெற்றி 

 மிதக்கும் யோகாசன போட்டி : ஏ.ஆர்.பி., மாணவர்கள் வெற்றி 

பொள்ளாச்சி: தேசிய அளவிலான மிதக்கும் யோகாசன போட்டியில், பொள்ளாச்சி ஏ.ஆர்.பி. இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்தியன் மிதக்கும் யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தேசிய மிதக்கும் யோகாசன போட்டி, கோவில்பட்டியில் நடந்தது. இதில், பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்துார் ஏ.ஆர்.பி. இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர் துருவா முதலிடமும், மாணவர்கள் தயான் அகமத், சஷ்டிவேல், மணவியர் புகழ்மதி, சர்விகா, மகிழினி ஆகியோர் இரண்டாமிடமும்; மாணவி திசாலினி மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, பள்ளியின் முதல்வர் அரசு பெரியசாமி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி