கோவையில் ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
கோவை: கோவை விமானப்படை பள்ளியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார்.கோவை, ரெட்பீல்ட்ஸ் பகுதியில் விமானப்படை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வடவள்ளி கோல்டன் நகரை சேர்ந்த ராஜன், 56 ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜன், தன்னிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக, ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். முதல்வர் மாணவியிடம் விசாரணை நடத்திய பின், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் விசாரிக்கின்றனர்.