உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் கலை திருவிழா

அரசு கல்லுாரியில் கலை திருவிழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கல்லுாரியில், கலை திருவிழா கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லுாரிகளில், கல்லுாரி கலைத்திருவிழா கொண்டாட உத்தரவிட்டார். அதன்படி, பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத்திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கப்பட்டது. வரும், 29ம் தேதி வரை கலைத்திருவிழா நடக்கிறது. போட்டிகளை, கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.ஒருங்கிணைப்பாளர் முனைவர் கதிர்வேல் வரவேற்றார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பேராசிரியர்கள் சக்திவேல் மற்றும் விமலா ராணி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.கவிதை, சிறுகதை, பேச்சு, மற்றும் வர்ணனை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வரும் நாட்களில், பட்ஜெட் போர், புதையல் வேட்டை, தனிப்பாடல் போட்டி, வாத்திய இசை, தனி நடனம், குழு நடனம், சைகை நாடகம், ஓவியம், குறும்படம், இளைஞர் பாராளுமன்றம் என, 32 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோன்ற விழாக்களால், மாணவ, மாணவியரின் அறிவாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றல்களை மேம்படுத்தும், என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி