உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலைத்திருவிழா போட்டி: ரங்கசாமிநாயுடு பள்ளி முதலிடம்

கலைத்திருவிழா போட்டி: ரங்கசாமிநாயுடு பள்ளி முதலிடம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் முதலிடம் பெற்றனர்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தன. இதில், வட்டார அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில், கல்வி அமைச்சர் மகேஷ், முதல் பரிசு பெற்ற கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி