மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
15-Dec-2024
கோவை; கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி விடுதி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 25 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி பயிலும், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர்.இதில், 100மீ., 200மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர் அசத்தினர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்ட போட்டியில், முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, மற்றொரு நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
15-Dec-2024