உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி வகுப்பு

மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி வகுப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ஆனந்த அனுபவ பயிற்சி எனும், வாழும் கலை பயிற்சி, ஜனவரி 2ம் தேதி துவங்குகிறது.இந்த பயிற்சி வகுப்பு மேட்டுப்பாளையம் சி.டி.சி., டெப்போ அருகில் உள்ள, எம்.எம்.எஸ். குளோபல் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஜனவரி, 2ம் தேதி துவங்கி, 4ம் தேதி முடிவடைகிறது. காலையில், 6:00 லிருந்து 8:30 மணி, 10:30 லிருந்து, 12:30 மணி வரையும், மாலை, 6:30 லிருந்து, இரவு, 8:30 மணி வரையும் என, மூன்று நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.இந்த பயிற்சியில் சுதர்சன கிரியா, யோகா, பிராணாயாமம், வாழ்க்கை ஞானங்கள் திறமைகள் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், மன அழுத்த ஹார்மோன்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 97154 10324 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ