உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.ஜி.எம்., கல்லுாரியில் அருட்செல்வர் சிலை திறப்பு

என்.ஜி.எம்., கல்லுாரியில் அருட்செல்வர் சிலை திறப்பு

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில் அருட்செல்வர் மகாலிங்கம் பிறந்தநாள், நிறுவனர் தின விழாவாக, கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், வரவேற்றார்.அங்கு அமைக்கப்பட்டிருந்த மகாலிங்கத்தின் சிலையை, கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், திறந்து வைத்து பேசுகையில், ''அருட்செல்வர் மகாலிங்கம், வாழ்வியல் களஞ்சியமாகவும் விளங்கினார். அவர் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணி மிகவும் இன்றியமையாதது,'' என்றார்.முன்னாள் மாணவ சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், மாணவர் நல முதன்மையர் முத்துக்குமரன், துறைத் தலைவர்கள் பேசினர். கல்லுாரி நிர்வாக மேலாளர் ரகுநாதன், முதன்மையர் உமாபதி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை