உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கோவை; கோயமுத்துார் ஆர்ய வைஸ்ய சமூகத்துக்கு சொந்தமான, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று கோலாகலமாக நடக்கிறது.கோவை வைசியாள் வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் நிர்மாணம் செய்யப்பட்டு,தன்னிகரற்ற புகழ்பெற்று விளங்குகிறது.இக்கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் நடக்கிறது. எட்டுகால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.பெனுகொண்டா ஷேத்ர பீடாதிபதி பிரக்யானந்தா சரஸ்வதி(பாலசுவாமி) சுவாமிஜி, ஸ்ரீவாசவி பீடம் பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிஜி, பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலை வகிக்கின்றனர்.காமகோடி வேதகிரி சாஸ்திரி சுரேஷ் சாஸ்திரிகள், ஸ்ரீ வித்யா உபாஸகர் சண்டீதிலகம் சாக்தஸ்ரீ சுதாகர் சர்மா ஆகியோர்,மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்கின்றனர்.இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் கும்பாபிஷேக பெருவிழா கமிட்டி சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை