உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு உதவி

அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு உதவி

சோமனூர்; வாகராயம்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.வாகராயம்பாளையத்தில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில்,தேவாங்கர் முன்னேற்ற அமைப்பு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் ராஜகோபால் அறக்கட்டளை சார்பில், புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.மாநில தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். 107 மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. சுப்பிரமணியம், நடராஜ், சூலூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ