/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திப்பாளையம் சந்திப்பில் ஆபத்து பள்ளமான சாலையால் தினமும் விபத்து
அத்திப்பாளையம் சந்திப்பில் ஆபத்து பள்ளமான சாலையால் தினமும் விபத்து
தினமும் விபத்து கணபதி, அத்திப்பாளையம் ரோடு, சிவா மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை நடுவே உள்ள பெரிய, பெரிய பள்ளங்களால் தினமும் விபத்து நடக்கிறது. - ஆறுச்சாமி: தண்ணீர் பற்றாக்குறை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோடு, நேதாஜிபுரம், 56வது வார்டு டி.என்.எச்.பி., காலனி புகுதியில், உப்பு தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை. பத்து நாட்கள், 20 நாட்கள் என அதிக நாட்கள் இடைவெளி விடப்படுகிறது. - சரவணன்:
Gallery குவியும் குப்பை வேலாண்டிபாளையம், 44வது வார்டு, ராமசாமி நாயுடு வீதி இரண்டில், திறந்தவெளியில் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் குப்பையை கொட்டி வருகின்றனர். புகார் செய்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை குப்பையை மட்டும் எடுக்கின்றனர். கொசு, ஈக்கள் அதிகமாகி துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்கவேண்டும். - சாமி: புதர்மண்டிய சாக்கடை ஒண்டிப்புதுார், திப்பே கவுண்டர் ஒன்றாவது வீதியில், பல வாரங்கள் ஆகியும் சாக்கடை சுத்தம் செய்யவில்லை. சாக்கடையே தெரியாத அளவிற்கு சுற்றிலும் புதர்மண்டிக்கிடக்கிறது. - காவியா: தெருவிளக்கு பழுது எஸ்.ஐ.எச்.எச்., காலனி ரோடு, நேதாஜிபுரம், 56வது வார்டு, எல் 161 டி.எம்.எச்.பி., காலனி எதிரே, 'எஸ்.பி. 46 பி - 9' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு எரியவில்லை. - பாலு: இருளால் பெருகும் குற்றம் அத்திப்பாளையம் முதல் சாமநாயக்கன்பாளையம் வரையுள்ள சாலையில், இதுவரை தெருவிளக்கு வசதி அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் அச்சத்துடனே வாகனஓட்டிகள் செல்கின்றனர். - ஹரிஷ்: விபத்திற்கு வாய்ப்பு மருதமலை மெயின் ரேட்டில், வசந்த் அண்ட் கோ கடை எதிர்ப்புறம் சாலை நடுவே உள்ள கம்பங்களில், 500 மீட்டருக்கு தெருவிளக்கு எரியவில்லை. கடந்த மூன்று மாதமாக தெருவிளக்குகள் பழுதாகியுள்ளது. - ரமேஷ்: நிரம்பி வழியும் குப்பை வடவள்ளி, சிவசக்தி காலனி, சமுதாய கூடம் அருகில் உள்ள தொட்டியில் இப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். தொட்டி நிரம்பி அப்பகுதி முழுவதும் குப்பை சிதறிக்கிடக்கிறது. பாதி சாலை வரையிலும் குப்பை நிரம்பியுள்ளது. - தண்டபாணி: சேதமடைந்த கம்பம் குறிச்சி, 96வது வார்டு, மாய சேர்வர் வீதியில் உள்ள, ' எஸ்.பி - 3 பி -13 ' என்ற எண் கெண்ட மின்கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் சேதமடைந்துள்ளதால், கம்பம் விழும்நிலையில் உள்ளது. - மணிகண்டன்: வாகன ஓட்டிகள் அவதி பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி - மதுக்கரை மார்க்கெட் ரோடு செல்லும் வழியில் உள்ள மாச்சநாயக்கன்பாளையத்தில் சாலை குண்டும் குழியுமாகவும் ஆங்காங்கே வேகத்தடைகள் இருப்பதாலும், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும். - பிரகாஷ்: குழியால் விபத்து போத்தனுார் ரயில் மண்டபம் ரவுண்டானாவில் சாலை நடுவே பெரிய குழி உள்ளது. மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் விழும் அபாயம் உள்ளது. வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். - சுப்பிரமணியம்: நாய் தொல்லை அதிகம் சிங்காநல்லுார், காமராஜ் ரோட்டில் இருந்து, மசக்காளிபாளையம் செல்லும் வழியில், நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை இவை துரத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். - சுரேஷ்: மசக்காளிபாளையம்.: