உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.டி.எம்., மிஷின் பழுது; வாடிக்கையாளர்கள் தவிப்பு

ஏ.டி.எம்., மிஷின் பழுது; வாடிக்கையாளர்கள் தவிப்பு

வால்பாறை ; வால்பாறையில், வங்கி ஏ.டி.எம்., மிஷின் பழுதானதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறை நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வங்கி வாடிக்கையாளர்களாக உள்ளனர்.குறிப்பாக, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக வங்கி வாயிலாக மாதம் தோறும் அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் சம்பளம் வழங்கப்படுகிறது.தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதம் தோறும், 7 மற்றும் 10ம் தேதிகளில், வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வால்பாறை பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வாடிக்கையாளர்கள் கூறியதாவது:வால்பாறை பாரத ஸ்டேட் வங்கியில் அடிக்கடி இந்த பிரச்னை உள்ளது. வங்கியில் உள்ள மூன்று ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இரண்டு மிஷின்கள் பழுதான நிலையில் உள்ளது.நடமாடும் ஏ.டி.எம்.,லும் பணம் இல்லை. பழுதடைந்த நிலையில் உள்ள இரண்டு மிஷின்களை சரி செய்வதுடன், வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில் அவற்றில் பணம் வைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது,'வங்கி விடுமுறையின் காரணமாக ஏ.டி.எம்.,களில் பணம் தீர்ந்துவிட்டது. மாலைக்குள் ஏ.டி.எம்., மிஷின்களிலும், நடமாடும் ஏ.டி.எம்.,லும் பணம் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu kandhasamy
நவ 22, 2024 08:58

இந்தியாவிலேயே மட்டமான சேவை வழங்குவது ஸ்டேட் பேங்க் தான் e Corner என ஒரு ஓரத்தில் பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த என 4 மெசின் வைத்து விடுவார்கள் ஆனால் அதில் அடிக்கடி பழுது ஏற்படும் அதை உடனே சரிசெய்ய மாட்டார்கள் பாஸ் புக் ல் படிக்க முடியாத அளவுக்கு பிரிண்ட் வரும் கணக்கில் பணம் போட்டால் குறுஞ் செய்தி வராது விசாரித்தால் மேலதிகாரிகளை கை காட்டிவிடுவார்கள் மொத்தத்தில் இந்தியா வில் மட்டமான சேவை வழங்குவது ஸ்டேட் பேங்க் தான் மகா மோசமான பேங்க் ஸ்டேட் பேங்க் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை