உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1.83 கோடி இழப்பீடு தராததால் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி முயற்சி

ரூ.1.83 கோடி இழப்பீடு தராததால் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி முயற்சி

கோவை; வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்திற்கு, ரூ.1.83 கோடி இழப்பீடு வழங்காததால், கலெக்டர் அலுவலக அசையும் சொத்துக்களை, ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கோவை, கணபதியில் வசித்து வந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான கணபதி மாநகரிலுள்ள, 18 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1986ல் கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடாக, குறிப்பிட்ட தொகை மட்டும் செலுத்திவிட்டு, 1.83 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தனர். இந்நிலையில், ராமசாமி இறந்துவிட்டார். நிலுவை தொகை கோரி, ராமசாமியின் வாரிசுதாரர்கள் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். கோர்ட் உத்தரவிட்டும் இழப்பீடு தொகை வழங்காததால், அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரித்த கோர்ட், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், டி.ஆர்.ஓ., கருவூலம், குற்றவியல் துறை ஆகிய அலுவலகங்களில் உள்ள டேபிள், சேர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை, ஜப்தி செய்ய உத்தரவிட்டது. கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, பணத்தை செலுத்த அவகாசம் கேட்டு, அதிகாரிகள் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அரசு வக்கீல் வாயிலாக ஆக.,26க்குள் பணம் செலுத்தி விடுவதாக, அவகாசம் கேட்டு, மனு தாக்கல் செய்தனர். இதனால், ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ