உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு

சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு

போத்தனுார்; போத்தனுார், கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் கலைமணி, 53. இவரது வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் குடியிருந்தார். கலைமணியின் தாய் எழுதிக் கொடுத்த இடப்பத்திரத்தை ராஜேஸ்வரி எடுத்துச் சென்றிருக்கிறார். பின் கலைமணியின் கையெழுத்திட்டு, தனது கணவர் கிருஷ்ணசாமி பெயரில் பத்திரம் தயாரித்துள்ளார். இதையறிந்த கலைமணி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அசல் பத்திரத்தை தாக்கல் செய்ய ராஜேஸ்வரிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாக்கல் செய்யாததால், கலைமணிக்கு சாதகமாக முடிந்தது. இச்சூழலில், தனது மருமகள் ஜெயந்தியுடன் சேர்ந்து ராஜேஸ்வரி மீண்டும் சொத்தை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் கலைமணி புகார் கொடுத்தார். இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை