உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் வணிக வளாக கடைகளுக்கு இன்று ஏலம்

சூலுார் வணிக வளாக கடைகளுக்கு இன்று ஏலம்

சூலுார்; சூலுார் பேரூராட்சி வணிக வளாக கடைகளுக்கு ஏலம் இன்று நடக்கிறது.சூலுார் பேரூராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்ட் இருந்த இடத்தில், புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இரு தளங்களில், தலா, 20 கடைகள் என, மொத்தம், 40 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான ஏலம், கடந்த, 4 ம்தேதி நடப்பதாக இருந்தது.இக்கடைகளுக்கான வைப்பு தொகை, வாடகை மிக அதிகமாக உள்ளதாகவும், ஒரு வருட வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், அரசியல் கட்சியினர் மற்றும் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., மற்றும் வணிகர்கள் வைப்புதொகை, வாடகை உள்ளிட்டவைகளை குறைக்க வேண்டும் எனவும், உள்ளூர் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில்,பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.மிக அதிகமாக உள்ள தொகைகளை குறைக்க வேண்டும், என,தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.அதனால், ஏலமும் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, சால்வன்சி, வைப்புத் தொகை, தலா ஒரு லட்சம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று ஏலம் நடக்க உள்ளது.

கடும் போட்டி

இன்று நடக்கும் ஏலத்தில் பங்கேற்க, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, 60 க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள்ளனர்.ஏலத்தில் பங்கேற்போருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேல் உள்ள கடைகளை விட, கீழ் உள்ள கடைகளை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை