ஆட்டோ டிரைவர்கள் அன்னுாரில் போராட்டம்
அன்னுார்; இருதரப்பு ஆட்டோ சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முற்றுகையிட்டதால், பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தி மற்றும் கோவையிலிருந்து வரும் பஸ்கள் அன்னுாரில் ஓதிமலை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக வெளியே செல்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pb71lia6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி வட புறம் மற்றும் தென் புறத்தில் பயணிகள் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓதிமலை ரோட்டிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்த சில ஆட்டோக்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் அன்னுார் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆட்டோக்களை போலீசார் வெளியேற்றினர். இரு வாரங்களுக்கு பின் நேற்று மீண்டும் ஒரு தொழிற்சங்க ஆட்டோக்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து மற்ற தொழிற் சங்கத்தினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.'தமிழகத்தில் எந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் ஆட்டோ ஸ்டாண்ட் கிடையாது. இங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களால் மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்,' என்று கூறி அந்த ஆட்டோக்களை சுற்றி நின்று முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சமாதானம் பேசி முற்றுகையை கைவிட செய்தனர். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என தெரிவித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.