ஆட்டோமோட்டோ 2024 கண்காட்சி நாளை நிறைவு
கோவை : கோவையில் தென்னிந்திய ஆட்டோமோட்டோ கண்காட்சி, நேற்று துவங்கியது. நாளை நிறைவுபெறுகிறது.கோவையில் கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில், 'ஏ' ஹாலில் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.பிரபலமான நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள், சிறப்பு அம்சங்களை விளக்கி வருகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களிலும், சிறிய ரக இரண்டு சக்கர வாகனங்கள், பைக்குகள், சரக்கு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கண்காட்சியில் முன்பதிவு செய்வோருக்கு, சிறப்பு சலுகைகளும் உள்ளன. நாளை நிறைவு பெறும் 3 நாள் கண்காட்சி, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரைநடக்கிறது.